Wednesday, July 18, 2012

அனுபவ முத்திரைகள்: வேலைக்கேற்ற கல்வி

அனுபவ முத்திரைகள்: வேலைக்கேற்ற கல்வி: இன்று  உயர் கல்வி  முடித்து ,மேம்பட்ட துறை துறை எடுத்து  தன்  மக்களை படிக்க வைக்க பெற்றவர்கள் அலையும் நேரமிது. இதில் அவர்கள் சில சங்கதிகளை ...

அனுபவ முத்திரைகள்: வேலைக்கேற்ற கல்வி

அனுபவ முத்திரைகள்: வேலைக்கேற்ற கல்வி: இன்று  உயர் கல்வி  முடித்து ,மேம்பட்ட துறை துறை எடுத்து  தன்  மக்களை படிக்க வைக்க பெற்றவர்கள் அலையும் நேரமிது. இதில் அவர்கள் சில சங்கதிகளை ...

வேலைக்கேற்ற கல்வி

இன்று  உயர் கல்வி  முடித்து ,மேம்பட்ட துறை துறை எடுத்து  தன்  மக்களை படிக்க வைக்க பெற்றவர்கள் அலையும் நேரமிது. இதில் அவர்கள் சில சங்கதிகளை கவனத்தில் கொண்டு முயற்சி எடுத்தல் நலம். பெரும் பாலானோர் நல்ல படிப்பு, அதற்குத் தகுந்த வேலை என்று இரண்டையுமே ஒரே தட்டில் வைத்து பார்த்து முடிவெடுக்கின்றனர். இப்படிச் செய்வதால் பாதிக்கு மேல் முன் பின் முரணாக ஆகக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஒருவர் ஜாதகப்படி அவருக்கு எந்த மாதிரி கல்வி அமையும் ; தொழில் எப்படி அமையும் என்றெல்லாம் ஓரளவு சரியாகக் கணிக்கலாம்.
படிப்புக்கு உரிய ஸ்தானம் இரண்டாமிடம். அதன் மீதுள்ள நுட்ப அறிவு பேசுமிடம் நான்காமிடம். தொழில் அமைவது பற்றிப் பேசுவது  பத்தாமிடம்.


புதன் நல்ல முறையில் அமைந்திருந்தால் ,தன அறிவுத்தி றத்தாலே அவன் மேன்மையடைய வாய்ப்பு உண்டு. பாடக் கல்வி வேண்டுமானால் அவனுக்கு இரண்டு, நாலாமிடம் கெடாது வலுவோடு இருக்க வேண்டும். சிலருக்கு புதன் சரியாக அமையாத நிலையில்  இந்த  இடங்கள் கை கொடுக்கும். மூன்றாமிடம் இவற்றுடன் சேர்ந்து,சந்திரனும் நன்றாக அமைந்து வலுவுடன் இருந்தால் கலை,கேள்விகளில் வல்லவனாய் இருப்பான். சுக்கிரன் நன்கமைந்தால்,இசை,நடிப்பு  கைகூடும்.
சூரியன், புதன் சேர்ந்திருக்க  கணிதத்  துறையும்,உடன் வியாழன்  ,கேது நன்கமைந்தால் சட்டக் கல்வியும் ஏற்படலாம்.
சூரியன்,சுக்கிரன் இணைவு மென்பொருள் துறை கல்வி சேர்க்கும். செவ்வாய்,சனி சேர்க்கை இயந்திர சம்பந்தம் ஏற்படுதலை அறிவிப்பதாவது. தொழில் நுணுக்கக் கல்வி என்றும் சொல்லலாம்.உடன் சந்திரன் பரிபூரணமாய் வரின் விவசாயம் செழிக்கும்; சுக்கிரன் சேர்ந்தால் கட்டிடக் கலை சம்பந்தம் உருவாகும்.

புதன்,வியாழன்,கேது உரிய இடத்தில இருந்தால் மருத்துவத்துறை கல்வி அமையும். ஆறாமிடம் சிறப்பு.

சரி, பின்னால் அவன் உத்தியோகம் பார்ப்பானா,சுய தொழில் செய்வானா என்ற சந்தேகம் யாருக்கும் எழும். ஒரு ஜாதகத்தில் சந்திரனை வியாழன் பார்த்திருந்தால் உத்தியோகம் நிச்சயம். சனி வலுப் பெற்றிருந்தால் உத்தியோகம் செய்ய விடாது. சொந்த தொழிலே அமையும்.பத்தாம் இடத்தை குரு பார்த்திருந்தாலும் வேலை உண்டு.
இரண்டு,நான்குடன் பத்தாமிடம் சம்பந்தம் பெற்றாலே படிப்புக் குண்டான வேலை.


கோதைதனபாலன்

Friday, June 15, 2012

அனுபவ முத்திரைகள்: திருமண காலங்கள்..!

அனுபவ முத்திரைகள்: திருமண காலங்கள்..!: திருமண காலங்கள்..! சிலருக்கு சரியான பருவத்தில் திருமணம் நிறைவேறும் . சிலருக்கு தள்ளிப் போகும்.எதுவும் நல்லதற்கே என்று  நாம் ...

திருமண காலங்கள்..!


திருமண காலங்கள்..!


சிலருக்கு சரியான பருவத்தில் திருமணம் நிறைவேறும் .
சிலருக்கு தள்ளிப் போகும்.எதுவும் நல்லதற்கே என்று 
நாம் கருத்தில் எடுத்துக் கொண்டாலும் சில விஷயங்களை
கவனத்தில் கொள்ளுதல் முறையன்றோ.? பொதுவாக  
பாவதோஷம்,செவ்வாய் தோஷம் உடைய வர்களுக்கு தாமத
திருமணம் நலமே. கிரஹா அமைப்பில் எந்த தோஷமும் இல்லைஎன்றாலும்
தசா புத்தி காரணமாய் தாமதப் படுதலும் உண்டு, திருமணம் நடக்க கோச்சார ரீதியில்
குருவான சுபர் ஏழு, எட்டு,பதினொன்றமிடம் பனிரண்டாம் இடம்
இவற்றில் ஒன்றை பார்த்திருத்தல் வேண்டும்.எல்லாவற்றிற்கும் மேலாக சுக்கிரன்
பலமே இல்லாது ,ஏழு, எட்டும் வலுவின்றி இருந்தால்
திருமண யோகம் இல்லை. சிலருக்கு ஸ்தான பலம் இருந்தும்
சுக்கிரன் கெட்டோ அல்லது பாவருடன் இணைந்தோ இருக்க
தசா புத்தி துணை செய்யாவிடில் குழந்தை பாக்கியம் இருந்தும்
துணைவருடன் கூடி வாழும் யோகம் இருக்காது. பொதுவான தடைகள்
உள்ள சாதகர்கள் திருமஞ்சேரி சென்றுவர திருமணங்கள் கைகூடுவது
உண்மையான நிலையாக உள்ளது.

Monday, June 4, 2012

அனுபவ முத்திரைகள்: குரு பெயர்ச்சி

அனுபவ முத்திரைகள்: குரு பெயர்ச்சி: குரு பெயர்ச்சியில் அனைவருக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கக் கூடும்.அதற்க்கு முன்னர் குருவின் தன்மைகளைத் தெரிந்துகொள்வது நல்லது.பொதுவாக...

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சியில் அனைவருக்கும் சில எதிர்பார்ப்புகள்
இருக்கக் கூடும்.அதற்க்கு முன்னர் குருவின் தன்மைகளைத்
தெரிந்துகொள்வது நல்லது.பொதுவாக குரு எனப்படும் வியாழ பகவான்
அனைவருக்கும் பொதுவில் சுப்பர் எனச் சொல்வதுண்டு.ஆனால் ரிஷபம்,
துலா ராசிக...
ாரர்களுக்கு பாபர் ஆவார்.மிதுன,கன்னி போன்ற உபய ராசிகாரர்களுக்கு
மாரகஸ்தான அதிபதி என்ற அமைப்பில் நல்லது செய்யாமல் இருப்பார் .
சுமார் ஒன்றரை ஆண்டுக்கொருமுறை ராசி மாறுவார்.வக்ரகதி அமைப்பு இவருக்கும் உண்டு.
புத்திரகாரகனான இவர் தனித்து அந்த ஐந்தாமிடத்தில்யாதொரு துணையுமோ, பார்வையுமோ
இல்லாதிருந்தால் பலனளிக்க மாட்டார்.பொதுவாக இவர் மந்தமாக செய்யல படுபவர்.
யாரொருவர தூண்டுதலிலே காரியமாற்றுவார். தான் பார்வை செய்யும் இடத்தை
அந்தந்த இடத்தின் தன்மைக்கேற்ப பலன்களை சற்றுமாற்றித் தரக் கூடிய வல்லமை உடையவர்.
ஐந்தாம்,ஏழாம்,ஒன்பதாம் பார்வை இவருக்கு உண்டு.கேந்திர இடங்களில் ஒன்று,நான்கு,ஏழு,பத்தாம்
இடத்தில் இவர் சுபராக நின்றால் கேந்திர தோஷம் ஏற்ப்பட்டு பலன் மட்டுப்படும்.அதுவே அது ஆட்சி
பெற்ற வீடாயிருக்கும் பட்சத்தில் கேந்திராதிபத்திய தோஷம் கடுமையாக ஏற்படும்.ராசியிலும்,
அம்சத்திலும் ஒரே வீட்டில் வீற்றிருந்தால் வர்கோத்தமம் அமைப்பில் வலு பெறுகிறார்.
கடகம் உச்சவீடு.மகரம் நீச வீடு. தனுசு,மீனம் ஆட்சி வீடு.புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி
நட்சத்திரங்களுக்கு இவர் அதிபதி.ராசிக்கு ஏழு,எட்டு, பதினொன்றாம் இடத்தில் வருங்காலத்து
திருமண யோகங்களைஅளிக்கக் கூடியவர்.இவர்சுபராய் ஐந்திலோ,அல்லது கேதுவோடு இணைய
சந்திரனும் நன்கமைய பிறந்தவர் அறக் கட்டளைகளில் ஈடுபடுவர்.

Wednesday, March 21, 2012

அனுபவ முத்திரைகள்: காலசர்ப்ப யோகம்.

அனுபவ முத்திரைகள்: காலசர்ப்ப யோகம்.: காலசர்ப்ப யோகம். ..   நம் இலக்கினம்  அடக்கமாக எல்லா கிரகங்களும் ராகு கேது நின்ற வரிசையில் அடங்கியிருந்தால் அதற்கு காலசர்ப்ப யோகம் என்று பெயர...

காலசர்ப்ப யோகம்.

காலசர்ப்ப யோகம். ..  நம் இலக்கினம்  அடக்கமாக எல்லா கிரகங்களும் ராகு கேது நின்ற வரிசையில் அடங்கியிருந்தால் அதற்கு காலசர்ப்ப யோகம் என்று பெயர். இந்த யோகம் உள்ளவர்களின் கிரகங்கள் எந்த தன்மையில்  எந்த வலு பெற்றிருந்தாலும் ராகு கேதுவுக்கு கட்டுப்பட்டவர்களே. இந்த  இரண்டு  கிரகங்களும் நல்ல தன்மையுடன் வலுவாக இருத்தல் அவசியமாகிறது. எப்படியும் பிற்காலத்தில்    நாற்பது  வயதுக்கு மேல்
ஜாதகரை சிறப்படையச் செய்வர். ஆரம்ப காலங்கள் சோதனைகள் நிறைந்ததும் ,முன்னேற்றத்தில் அதிக முட்டுக்கட்டைகள் ஏற்பட்டும் காணப்படும்.
இந்த அமைப்பில் லக்கினமோ அல்லது ஏதேனும் ஒரு கிரகம் விலகி தனித்திருக்குமானால் அதற்கு காலசர்ப்ப  பங்க யோகம் என்று பெயர்.

இவர்கள் கிரக அமைப்பின் படி  எப்பொழுதும்  ஏதோ ஒன்றில்  சிறப்பாக வாழ்வார்.

கோதைதனபாலன்.