புத்திரஸ்தானம் என்பது ஒரு ஜாதகத்தில் 5 வது இடத்தை குறிப்பது ஆகும்.இந்த இடம் சுத்தமாக இருத்தல் அவசியம்.யாதொரு பாவ கிரகங்களின் சேர்க்கையோ ,பார்வையோ இருத்தல் கூடாது.புத்திரகாரகனான குரூபார்வையோ,லக்னாதிபதி பார்வையோ பெற்றிருத்தல் அவசியம். சுபகிரகங்கள் இடம்பெறலாம்.வியாழன் தனித்து இடம்பெற்றிருக்கக் கூடாது. அலி கிரகங்கள் புதன்,சனி,யாருடனும் சேராமல்,அல்லது பார்வை பெறாமல் அமர்ந்திருத்தல் ஆகாது.ராகு,கேது இருந்தால் தோஷம் ஏற்படும்.சுபர் பார்வை இருந்தால் மட்டுப்படும்.எது எப்படி இருந்தாலும் .கர்ம ஸ்தானமான10 வது இடமோ ,அதன் அதிபதியோ பலத்துடன்,லக்னாதிபதி ,அல்லது வியாழன் பார்வைபெற்றிருந்தால் கர்மபுத்திர பாக்கியம் பிற்பகுதியில் உண்டு. செவ்வாய் ,சூர்யன், வியாழன் ஆண் மகவை நிர்ணயிக்கும். சந்திரன்,சுக்கிரன் பெண் மகவை நிர்ணயம் செய்யும்.
கோதைதனபாலன்.
கோதைதனபாலன்.


