Saturday, November 5, 2011

சனி தரும் பலன்

சனி பகவானுக்கு நீதிமான்என்ற பெயர் உண்டு .இவர் யோகராக அமைந்த பட்சத்தில் அவர் திசையில் ,புத்தியில் அவர் அளித்ததை யாராலும் பிடுங்கிவிட முடியாது. பாவராக அமைந்திடின் அவர் தரும் அழிவை பொறுப்பது கஷ்டம் ,  சுபர் பார்த்திருப்பின் தண்டித்து கரை சேர்ப்பார்.  குருவுக்கு நிகர் பலமுள்ளவர்.    பொதுச்சுபராகவோ  , யோகராகவோகுரு சனியை பார்த்திருந்தால் தன்மைக்கேற்ப செயலாக்கம் மட்டுப்படும்.  அஷ்டமா ஸ்தானத்தில் சனி வலுத்திருந்தால் ஆயுள் தீர்க்கம் உண்டு .  ஆனால் காரியத்தடைகள் அதிகம் ஏற்படுத்துவார்.  சனி பார்த்த சந்திரன் திசைகளில் காரிய துரிதம் இருக்கும் . ஏழரை சனி என்ற அதிகார பலம் இவர் ஒருவருக்கே உண்டு. கழிவு சனியில் எந்தவிதத்திலாவது நன்மை செய்துதான் செல்வார் .   மூன்று சுற்று ஏழரைசனி காண்பவரும் உண்டு. ஏழரையில் சுப்பர் பலன் , பார்வை பெற்றிருந்தால்  கடுமை குறையும்.  திசா புத்தி நாதனை மீறி செய்யுதல் முடியாது. சனி பிறந்த ஜாதகத்தில் வலு பெற்றிருந்தால் சோதனை கொடுத்தே நல்லது செய்வார்.   வலு குறைந்திருப்பின்  சோதனைகள் கடுமையாகும். சனி குருபார்வை இல்லாது தனி உன்னத வலு பெற்றிருந்தால் சுய சம்பாத்திய தேடல் அளிப்பார். குரு பார்த்திருந்தால் கோடிஸ்வரனாயினும்  உத்தியோகம் பார்த்துதான் ஆக வேண்டும். மூதாதையர்களுக்கு இவர் கிழமைகளில் விரதம் இருப்பது நன்று.

 கோதைதனபாலன். 




No comments:

Post a Comment