திரு.மாதேஸ்வரன் அவர்கள் புத்தகம் ஜோதிடக் கலை எனது பால பாடமாகும். துருவ நாடி, புலிப்பாணி ஜோதிடம், சுந்தர சேகரம், பி .வி ராமன் புத்தகங்கள் மற்றும் சில ஜோதிட அறிவை சற்று வியாபிக்கச் செய்தன.மேலாக படித்தவற்றை எல்லாம் எனது குடும்பத்தார்,நெருங்கினோர் ஜாதகங்களுடன் ஒப்பிட்டு உண்மை அறிந்து சொல்ல முற்பட்டது, இன்றும் சரியாகப் புரிந்து கொள்ள உதவியாய் உள்ளது. திரு.மாதேஸ்வரன் தன்முகவுரையில் தான் நாத்திகனாய் இருந்து பின் மாறி இந்நூல் எழுதியதாகச் சொன்னது என் நம்பிக்கைக்கு வித்தானது.
Wednesday, October 9, 2013
'Idhayam oru koyil ' song from 'Idhaya Koyil' mpeg1video
இதயத்தில் அழகாக என்றென்றும் குடியேறிய ஒரு...அழகான.. நெஞ்சைத் தாலாட்டும் ஒரு சுகமான ஆத்மா ராக பாவங்கள்...!!
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே...! எனது ஜீவன் நீதான் என்றும் புதிது. ஆத்ம ராகத்தில் ஆடும் இருஉயிர்கள்.. உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே... அவன் ஜீவன் இவள்தான்.. அவனுக்கு என்றும் புதிது.. காதலிக்கு இவன் இசையை மலராய் நாளும் சூட்டுவான்.. என்ன ஒரு உணர்வு...!!
கோதை தனபாலன்
Tuesday, August 20, 2013
யோகநிலை ஒருவருக்கொருவர் வேறுபாடும் நிலை.
சிலருக்கு யோக ஸ்தானம் ஒன்றுபோல் அமைந்திருந்தாலும் பலன்களின் தன்மைகள் மாறுபடும். காரணம் நற்பலன் கொடுக்கும் காரியக் கிரகம் ,அல்லது கெடுதல் செய்யும் காரியக் கிரகம் எத்தன்மையது, எந்த இடத்திற்கு பாடியப்பட்டது மட்டுமே கவனம் கொள்ளாமல் அவை ஏறியிருக்கும் நட்சத்திரம் எப்படிப்பட்டது என்று அறிந்தே பலன் காண வேண்டும். பொது சுபர், லக்ன சுபர் என்று பிரிக்கப் படும்போதே லக்ன சுபரே ஜாதகருக்கு நன்மை அதிகம் தரக் கூடிய ஆதிபத்யத்திற்கு உள்ளாகிறான். இவை செயல்படும் தன்மைகளை அவை ஏறி நிற்கக் கூடிய நட்சத்திர சாரங்களே தீர்மானிக்கின்றன. சுபர் 6 , 8, 12 பாவஸ்தான அதிபதியின் காரக நட்சதிரத்தில் இருந்தால் பலன்கள் இல்லை. மற்றையதில் இருந்தால் பலன்கள் அந்தந்த வலு, தன்மைகளுக்கு ஏற்றாற்போல் வெளிப்படும். பாவர்கள் சுப ஸ்தானத்து அதிபதி காரகம் பெற்ற நட்சத்திரத்தில் ஏறி நின்றால் கடுமை குறைந்து காணப்படும்.
கோதைதனபாலன்.
Subscribe to:
Posts (Atom)