Saturday, December 17, 2011

அனுபவ முத்திரைகள்: குணநலன்கள் அறிவது

அனுபவ முத்திரைகள்: குணநலன்கள் அறிவது: பழகும்   ஒருவரின் குணநலன்கள் அறிவது சில நேரங்களில் நமது கட்டாய கடமை ஆகிறது.ஒருவரிடம் சில பண்புகள் பிறந்தநேர பலனாய் ஒட்டிக்கொண்டுவிடும். மாறா...

குணநலன்கள் அறிவது

பழகும்   ஒருவரின் குணநலன்கள் அறிவது சில நேரங்களில் நமது கட்டாய கடமை ஆகிறது.ஒருவரிடம் சில பண்புகள் பிறந்தநேர பலனாய் ஒட்டிக்கொண்டுவிடும். மாறாது . குணநலன்கள் மாறி வரும். சந்திரன் மன நலனை பற்றி பேசுபவன். இவன் கேதுவுடன் இருந்தாலோ, பார்வை பெற்றாலோ மனதை கெடுக்கவே செய்வான். சுபர் பார்வை பெற்றிருப்பின் எத்தகைய குணம் கொண்டிருப்பினும் நல்லதுக்கே துணை போவான். அப்படி சுபர் பார்வை ,இணைவு மத்திமமான முறையில் இருந்தாலோ,வலு குறைந்தவனாய் ஆனாலோ மன ஆரோக்கியம் குறைந்து காணப்படுவான்.சுபராய் குரூ பார்வை
சந்திரன் கேதுவுக்கு இருப்பின் தெய்வ நம்பிக்கை பெற்று அக்குறையை வெல் பவனாகிறான்.  2ஆம் இடம் வலுபெற்று ,புதன் நன்னிலையில் வலுவுடன் இருந்தால் தீர்க்க தரிசனம் உள்ளவனாகிறான்.புதன் நீசம் பெற்றிருந்தால் குத்தலான பேச்சு இருக்கும்.இது குறைகள் இருந்தும் புண்ணிய பலன் சிறப்புடன் இருக்கு மானால் தப்பித்துக்கொண்டு வாழ்க்கையை நன்முறையில் ஓட்டிவிடுவான்.செவ்வாய் ,சுக்கிரன் சேர்ந்து பாதகமான முறையில் இருத்தல் ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்கும். செவ்வாயும் ராகுவும் இணைவோ ,பார்வையோ பெற்றிருந்தால் வில்லங்கம் தீர்க்க வேண்டிவரும்.சனி 2 ல் அமருமானால் சொல் பளிச்சென்று வரும் நல்லதானாலும் சரி ,    கெட்டதானாலும்சரி.  அதுவே சுபராக அமரும் பொழுது ,  4  ஆம் இடம் வலுப்பெற்று புதன் கெடாமல் இருந்தால் நியாயம் தெரிந்து பேசுபவனாகிறான். சூரியன் வலுவுடன் இருக்க சந்திரனும் கெடாது இருக்குமானால் ஆன்ம சிந்தனையில் நாட்டம் செல்லும்.


 கோதைதனபாலன். 

Friday, December 9, 2011

அனுபவ முத்திரைகள்: கிரகமாலிகா யோகம்

அனுபவ முத்திரைகள்: கிரகமாலிகா யோகம்: கிரகமாலிகா யோகம் என்பது ஆயுள் பரிந்தர்யம் ஒரு செல்வாக்கான வாழ்க்கையை அளிப்பதாகும். இந்த யோகம் பெற்றவர்கள் தான் நின்ற இடத்து சிறப்பினும் மேல்...

கிரகமாலிகா யோகம்

கிரகமாலிகா யோகம் என்பது ஆயுள் பரிந்தர்யம் ஒரு செல்வாக்கான வாழ்க்கையை அளிப்பதாகும். இந்த யோகம் பெற்றவர்கள் தான் நின்ற இடத்து சிறப்பினும் மேல்நோக்கி வருவாரன்றி  கீழிறங்க மாட்டார்கள். சுபர்கள் நல்ல நிலை பெற்று சரியான திசை நடக்குமாயின் வாழ்வு வளமோடும்  செல்வாக்கோடும் இருக்கும். இந்த அமைப்பு இலக்கினம் தொட்டு தொடர்சியாக வரிசை கெடாது எல்லா கிரகங்களும் நின்றிருத்தல் வேண்டும். யோக பலன்களாகவே  நடக்கும்.
ஒரு ஜாதகத்தில் லக்னம் தொடக்கம் நாலு கேந்திரங்களில் நிற்கும் கிரகங்கள் வலுவுடன் இருக்க ஜாதகன் தன கால் வலுவுடன் இறுதிவரை நிற்பான்.
இலக்னமும் ராசியும் ஒன்றாக அமையப் பெற்றவர்கள் தனக்கென்று ஓர் வழி அமைத்து அதன் வழிதான் செல்வர்.


 கோதைதனபாலன் .