Friday, June 15, 2012

அனுபவ முத்திரைகள்: திருமண காலங்கள்..!

அனுபவ முத்திரைகள்: திருமண காலங்கள்..!: திருமண காலங்கள்..! சிலருக்கு சரியான பருவத்தில் திருமணம் நிறைவேறும் . சிலருக்கு தள்ளிப் போகும்.எதுவும் நல்லதற்கே என்று  நாம் ...

திருமண காலங்கள்..!


திருமண காலங்கள்..!


சிலருக்கு சரியான பருவத்தில் திருமணம் நிறைவேறும் .
சிலருக்கு தள்ளிப் போகும்.எதுவும் நல்லதற்கே என்று 
நாம் கருத்தில் எடுத்துக் கொண்டாலும் சில விஷயங்களை
கவனத்தில் கொள்ளுதல் முறையன்றோ.? பொதுவாக  
பாவதோஷம்,செவ்வாய் தோஷம் உடைய வர்களுக்கு தாமத
திருமணம் நலமே. கிரஹா அமைப்பில் எந்த தோஷமும் இல்லைஎன்றாலும்
தசா புத்தி காரணமாய் தாமதப் படுதலும் உண்டு, திருமணம் நடக்க கோச்சார ரீதியில்
குருவான சுபர் ஏழு, எட்டு,பதினொன்றமிடம் பனிரண்டாம் இடம்
இவற்றில் ஒன்றை பார்த்திருத்தல் வேண்டும்.எல்லாவற்றிற்கும் மேலாக சுக்கிரன்
பலமே இல்லாது ,ஏழு, எட்டும் வலுவின்றி இருந்தால்
திருமண யோகம் இல்லை. சிலருக்கு ஸ்தான பலம் இருந்தும்
சுக்கிரன் கெட்டோ அல்லது பாவருடன் இணைந்தோ இருக்க
தசா புத்தி துணை செய்யாவிடில் குழந்தை பாக்கியம் இருந்தும்
துணைவருடன் கூடி வாழும் யோகம் இருக்காது. பொதுவான தடைகள்
உள்ள சாதகர்கள் திருமஞ்சேரி சென்றுவர திருமணங்கள் கைகூடுவது
உண்மையான நிலையாக உள்ளது.

Monday, June 4, 2012

அனுபவ முத்திரைகள்: குரு பெயர்ச்சி

அனுபவ முத்திரைகள்: குரு பெயர்ச்சி: குரு பெயர்ச்சியில் அனைவருக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கக் கூடும்.அதற்க்கு முன்னர் குருவின் தன்மைகளைத் தெரிந்துகொள்வது நல்லது.பொதுவாக...

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சியில் அனைவருக்கும் சில எதிர்பார்ப்புகள்
இருக்கக் கூடும்.அதற்க்கு முன்னர் குருவின் தன்மைகளைத்
தெரிந்துகொள்வது நல்லது.பொதுவாக குரு எனப்படும் வியாழ பகவான்
அனைவருக்கும் பொதுவில் சுப்பர் எனச் சொல்வதுண்டு.ஆனால் ரிஷபம்,
துலா ராசிக...
ாரர்களுக்கு பாபர் ஆவார்.மிதுன,கன்னி போன்ற உபய ராசிகாரர்களுக்கு
மாரகஸ்தான அதிபதி என்ற அமைப்பில் நல்லது செய்யாமல் இருப்பார் .
சுமார் ஒன்றரை ஆண்டுக்கொருமுறை ராசி மாறுவார்.வக்ரகதி அமைப்பு இவருக்கும் உண்டு.
புத்திரகாரகனான இவர் தனித்து அந்த ஐந்தாமிடத்தில்யாதொரு துணையுமோ, பார்வையுமோ
இல்லாதிருந்தால் பலனளிக்க மாட்டார்.பொதுவாக இவர் மந்தமாக செய்யல படுபவர்.
யாரொருவர தூண்டுதலிலே காரியமாற்றுவார். தான் பார்வை செய்யும் இடத்தை
அந்தந்த இடத்தின் தன்மைக்கேற்ப பலன்களை சற்றுமாற்றித் தரக் கூடிய வல்லமை உடையவர்.
ஐந்தாம்,ஏழாம்,ஒன்பதாம் பார்வை இவருக்கு உண்டு.கேந்திர இடங்களில் ஒன்று,நான்கு,ஏழு,பத்தாம்
இடத்தில் இவர் சுபராக நின்றால் கேந்திர தோஷம் ஏற்ப்பட்டு பலன் மட்டுப்படும்.அதுவே அது ஆட்சி
பெற்ற வீடாயிருக்கும் பட்சத்தில் கேந்திராதிபத்திய தோஷம் கடுமையாக ஏற்படும்.ராசியிலும்,
அம்சத்திலும் ஒரே வீட்டில் வீற்றிருந்தால் வர்கோத்தமம் அமைப்பில் வலு பெறுகிறார்.
கடகம் உச்சவீடு.மகரம் நீச வீடு. தனுசு,மீனம் ஆட்சி வீடு.புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி
நட்சத்திரங்களுக்கு இவர் அதிபதி.ராசிக்கு ஏழு,எட்டு, பதினொன்றாம் இடத்தில் வருங்காலத்து
திருமண யோகங்களைஅளிக்கக் கூடியவர்.இவர்சுபராய் ஐந்திலோ,அல்லது கேதுவோடு இணைய
சந்திரனும் நன்கமைய பிறந்தவர் அறக் கட்டளைகளில் ஈடுபடுவர்.