Wednesday, July 18, 2012

வேலைக்கேற்ற கல்வி

இன்று  உயர் கல்வி  முடித்து ,மேம்பட்ட துறை துறை எடுத்து  தன்  மக்களை படிக்க வைக்க பெற்றவர்கள் அலையும் நேரமிது. இதில் அவர்கள் சில சங்கதிகளை கவனத்தில் கொண்டு முயற்சி எடுத்தல் நலம். பெரும் பாலானோர் நல்ல படிப்பு, அதற்குத் தகுந்த வேலை என்று இரண்டையுமே ஒரே தட்டில் வைத்து பார்த்து முடிவெடுக்கின்றனர். இப்படிச் செய்வதால் பாதிக்கு மேல் முன் பின் முரணாக ஆகக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஒருவர் ஜாதகப்படி அவருக்கு எந்த மாதிரி கல்வி அமையும் ; தொழில் எப்படி அமையும் என்றெல்லாம் ஓரளவு சரியாகக் கணிக்கலாம்.
படிப்புக்கு உரிய ஸ்தானம் இரண்டாமிடம். அதன் மீதுள்ள நுட்ப அறிவு பேசுமிடம் நான்காமிடம். தொழில் அமைவது பற்றிப் பேசுவது  பத்தாமிடம்.


புதன் நல்ல முறையில் அமைந்திருந்தால் ,தன அறிவுத்தி றத்தாலே அவன் மேன்மையடைய வாய்ப்பு உண்டு. பாடக் கல்வி வேண்டுமானால் அவனுக்கு இரண்டு, நாலாமிடம் கெடாது வலுவோடு இருக்க வேண்டும். சிலருக்கு புதன் சரியாக அமையாத நிலையில்  இந்த  இடங்கள் கை கொடுக்கும். மூன்றாமிடம் இவற்றுடன் சேர்ந்து,சந்திரனும் நன்றாக அமைந்து வலுவுடன் இருந்தால் கலை,கேள்விகளில் வல்லவனாய் இருப்பான். சுக்கிரன் நன்கமைந்தால்,இசை,நடிப்பு  கைகூடும்.
சூரியன், புதன் சேர்ந்திருக்க  கணிதத்  துறையும்,உடன் வியாழன்  ,கேது நன்கமைந்தால் சட்டக் கல்வியும் ஏற்படலாம்.
சூரியன்,சுக்கிரன் இணைவு மென்பொருள் துறை கல்வி சேர்க்கும். செவ்வாய்,சனி சேர்க்கை இயந்திர சம்பந்தம் ஏற்படுதலை அறிவிப்பதாவது. தொழில் நுணுக்கக் கல்வி என்றும் சொல்லலாம்.உடன் சந்திரன் பரிபூரணமாய் வரின் விவசாயம் செழிக்கும்; சுக்கிரன் சேர்ந்தால் கட்டிடக் கலை சம்பந்தம் உருவாகும்.

புதன்,வியாழன்,கேது உரிய இடத்தில இருந்தால் மருத்துவத்துறை கல்வி அமையும். ஆறாமிடம் சிறப்பு.

சரி, பின்னால் அவன் உத்தியோகம் பார்ப்பானா,சுய தொழில் செய்வானா என்ற சந்தேகம் யாருக்கும் எழும். ஒரு ஜாதகத்தில் சந்திரனை வியாழன் பார்த்திருந்தால் உத்தியோகம் நிச்சயம். சனி வலுப் பெற்றிருந்தால் உத்தியோகம் செய்ய விடாது. சொந்த தொழிலே அமையும்.பத்தாம் இடத்தை குரு பார்த்திருந்தாலும் வேலை உண்டு.
இரண்டு,நான்குடன் பத்தாமிடம் சம்பந்தம் பெற்றாலே படிப்புக் குண்டான வேலை.


கோதைதனபாலன்

No comments:

Post a Comment