Wednesday, September 28, 2011

சகடயோகம்

ராசி கட்டத்தில் வியாழனும் சந்திரனும் ஒருவர்கொருவர் ஆறாமிடம் அல்லது எட்டாமிடத்தில் இருந்தால் ஏற்படுவது  சகட யோகம். இதன் பலன் யோகங்கள் சிறிது காலம் ஏறுவதும் சிறிது காலம் இறங்குவதுமாய் சம்பவிக்கப்படும். இருவரும் லக்னத்திற்கு சுபர்களாய் இருந்திட்டால் கூடுதல் யோகம் சற்று  தங்கும். தேய்பிறை சந்திரன் பெரிய அளவில் தராது.வியாழன் லக்ன பாவியானால் யோகம் மட்டுப்படும்.எனினும்பொதுச் சுபர் என்ற வகையில் சிறிதளவு நன்மை புரியலாம். இவைகள் தாங்கள் ஜென்மகாலத்தில் ஏறி நின்ற நட்சத்திரம் சுப,அசுப,மத்திம தன்மை கணித்தே செயலில் இறங்குவர். 
 தாங்கள் நின்றிருந்த பாவத்தின் அடிப்படையில் பலன் புரிவர்.            

பூரண சந்திரன் .........முழுச்சுபர்.  பெண் கிரகம்.              லக்ன சுபர்,பாவர் 
                                                                                                             என்பது 
தேய்பிறை சந்திரன் ......... .பாவர் ஆண் கிரகம்.              வேறு வேறு.        


கோதைதனபாலன் 




அனுபவ முத்திரைகள்: நீச பங்க ராஜ யோகம்

அனுபவ முத்திரைகள்: நீச பங்க ராஜ யோகம்: கிரகங்கள் நீசம் என்பது அவை தங்கள் பலம் இழந்து செய்யலாற்றும் நிலைமை. அவ்வாறு இருக்கையில் பொது சுப கிரகங்களான வியாழன்,சந்திரன் பார்வை பெற்ற...

நீச பங்க ராஜ யோகம்

கிரகங்கள் நீசம் என்பது அவை தங்கள் 
பலம் இழந்து செய்யலாற்றும் நிலைமை.
அவ்வாறு இருக்கையில் பொது சுப 
கிரகங்களான வியாழன்,சந்திரன் பார்வை 
பெற்றிருந்தாலோ,அவர்களின் கேந்திரங்களில் 
நின்றிருந்தாலும் பலம் பெற்றதாய் கருதப்படும்.                                                                              
ராசியில்  நீசம் பெற்று அம்சத்தில் உச்சம்
பெற்றிருந்தாலும் பலம் உண்டு.ஆனால் 
ராசியில் உச்சம் பெற்று அம்சத்தில் நீசமானால் 
பலமில்லை.பரிவர்த்தனை யோகத்தில் 
பலம் உண்டு. இது தரும் பலனாவது, 
எந்தவகையிலும் ஆரம்பத்தில் சிரமம் 
தாமதம் ஏற்படுத்தினாலும் நன்மையான 
யோகம் தருவதாய் மாறி நிற்கும். 

 கோதைதனபாலன்  
நீச கிரகங்கள் 
தங்கள் திசை புத்தி காலங்களில் 
 நற்பலன்தரும். மற்றையவர் 
திசை நடக்கும்காலத்தில்   
 நன்மை செய்யாது. 


                                                                                                                                         

Tuesday, September 27, 2011

அனுபவ முத்திரைகள்: முகவுரை

அனுபவ முத்திரைகள்: முகவுரை: அனுபவ முத்திரை வரிசையில் இந்த தொகுப்பை ஜோதிடம் சார்ந்த துறைக்கு அர்பணிக்கிறேன். நான் தொழில் முறை ஜோதிடம் கையாளவில்லை.விஞ்ஞான பூர்வமாய் அறிந்...

முகவுரை

அனுபவ முத்திரை வரிசையில் இந்த தொகுப்பை ஜோதிடம் சார்ந்த துறைக்கு அர்பணிக்கிறேன். நான் தொழில் முறை ஜோதிடம் கையாளவில்லை.விஞ்ஞான பூர்வமாய் அறிந்திட்டு ஆத்மார்த்தமாய் உணர்ந்து கொண்ட விஷயங்களை ,பாடமாக அல்லாது அவ்வப்பொழுது மனதில் இருத்தி வைத்துக்கொள்ளக் கூடியதாய் பல கைப்பிரதிகளாவது போன்று தகவல்களை தர விழைகிறேன்.   

நொந்த மனதில் எழும் எண்ணத் தெளிவுகள் உழுத நிலமாகத்தான் இருக்கும் .அதில் விழும் ஆர்வம் எத்தகையதாயினும் பரிமளித்து வரக் கூடிய ஒன்றாகும்.இருபது வருடம் முன்னர் நான் உடல் நலம் மிகவும் குன்றி சுமார் ஆறு வருடங்கள் வீட்டாளாக இருந்த பொழுது கற்று தேர்ந்தது இந்த ஜோதிடம்


  கஜகேசரி யோகம்.   

 சரி ,இன்று ஜோதிட உலகில் விருப்பமாயும் ,பலமான ஒன்றாகவும் பேசப்படுவது கஜகேசரி யோக அமைப்பு . இதன் பலன் :   இந்த யோகத்தை உண்டுபண்ணும் கிரகங்கள் பலம் பொருந்தியனவாய் இருத்தல் அவசியம்.வியாழனும் ,சந்திரனுமே இந்த யோகத்தின் காரண கர்த்தாக்கள். ஒன்றுக்கொன்று கேந்திர அமைப்பில் இருக்கும் போது ஏற்படுவது. எந்த பாவங்களிலிருந்து,எப்படிப்பட்டவர்களாக .எந்தவித பலத்துடன் உள்ளனரோ அது ஒத்து திசாபுத்திக்கு   ஏற்பசெயல்படுவார்கள் . யோகம் தருவது வாழ் நாள் முழுவதும்  அசாத்திய மன உறுதி மட்டுமே.  இதன் தாக்கம் எதற்காகவோ என்றும் போராடி சாதிப்பது ஆகும்.       

கேந்திரம் அமைப்பு:  லக்னத்திலிருந்து எண்ணிவர  நான்காமிடம்,ஏழாமிடம்.பத்தாமிடம் ஆகும் .  யோக அமைப்பில் வியாழனும் சந்திரனும் ஒருவர்க்கொருவர் எண்ணிவரும் இடங்களாகும்.    

    கோதைதனபாலன் 




   கலைஞர் கருணாநிதிக்கு இந்த யோகம் அசாத்தியமாக உள்ளது என்று ஜோதிட வல்லுநர் சொல்வர்.