திரு.மாதேஸ்வரன் அவர்கள் புத்தகம் ஜோதிடக் கலை எனது பால பாடமாகும். துருவ நாடி, புலிப்பாணி ஜோதிடம், சுந்தர சேகரம், பி .வி ராமன் புத்தகங்கள் மற்றும் சில ஜோதிட அறிவை சற்று வியாபிக்கச் செய்தன.மேலாக படித்தவற்றை எல்லாம் எனது குடும்பத்தார்,நெருங்கினோர் ஜாதகங்களுடன் ஒப்பிட்டு உண்மை அறிந்து சொல்ல முற்பட்டது, இன்றும் சரியாகப் புரிந்து கொள்ள உதவியாய் உள்ளது. திரு.மாதேஸ்வரன் தன்முகவுரையில் தான் நாத்திகனாய் இருந்து பின் மாறி இந்நூல் எழுதியதாகச் சொன்னது என் நம்பிக்கைக்கு வித்தானது.
Saturday, December 17, 2011
அனுபவ முத்திரைகள்: குணநலன்கள் அறிவது
அனுபவ முத்திரைகள்: குணநலன்கள் அறிவது: பழகும் ஒருவரின் குணநலன்கள் அறிவது சில நேரங்களில் நமது கட்டாய கடமை ஆகிறது.ஒருவரிடம் சில பண்புகள் பிறந்தநேர பலனாய் ஒட்டிக்கொண்டுவிடும். மாறா...
குணநலன்கள் அறிவது
பழகும் ஒருவரின் குணநலன்கள் அறிவது சில நேரங்களில் நமது கட்டாய கடமை ஆகிறது.ஒருவரிடம் சில பண்புகள் பிறந்தநேர பலனாய் ஒட்டிக்கொண்டுவிடும். மாறாது . குணநலன்கள் மாறி வரும். சந்திரன் மன நலனை பற்றி பேசுபவன். இவன் கேதுவுடன் இருந்தாலோ, பார்வை பெற்றாலோ மனதை கெடுக்கவே செய்வான். சுபர் பார்வை பெற்றிருப்பின் எத்தகைய குணம் கொண்டிருப்பினும் நல்லதுக்கே துணை போவான். அப்படி சுபர் பார்வை ,இணைவு மத்திமமான முறையில் இருந்தாலோ,வலு குறைந்தவனாய் ஆனாலோ மன ஆரோக்கியம் குறைந்து காணப்படுவான்.சுபராய் குரூ பார்வை
சந்திரன் கேதுவுக்கு இருப்பின் தெய்வ நம்பிக்கை பெற்று அக்குறையை வெல் பவனாகிறான். 2ஆம் இடம் வலுபெற்று ,புதன் நன்னிலையில் வலுவுடன் இருந்தால் தீர்க்க தரிசனம் உள்ளவனாகிறான்.புதன் நீசம் பெற்றிருந்தால் குத்தலான பேச்சு இருக்கும்.இது குறைகள் இருந்தும் புண்ணிய பலன் சிறப்புடன் இருக்கு மானால் தப்பித்துக்கொண்டு வாழ்க்கையை நன்முறையில் ஓட்டிவிடுவான்.செவ்வாய் ,சுக்கிரன் சேர்ந்து பாதகமான முறையில் இருத்தல் ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்கும். செவ்வாயும் ராகுவும் இணைவோ ,பார்வையோ பெற்றிருந்தால் வில்லங்கம் தீர்க்க வேண்டிவரும்.சனி 2 ல் அமருமானால் சொல் பளிச்சென்று வரும் நல்லதானாலும் சரி , கெட்டதானாலும்சரி. அதுவே சுபராக அமரும் பொழுது , 4 ஆம் இடம் வலுப்பெற்று புதன் கெடாமல் இருந்தால் நியாயம் தெரிந்து பேசுபவனாகிறான். சூரியன் வலுவுடன் இருக்க சந்திரனும் கெடாது இருக்குமானால் ஆன்ம சிந்தனையில் நாட்டம் செல்லும்.
கோதைதனபாலன்.
சந்திரன் கேதுவுக்கு இருப்பின் தெய்வ நம்பிக்கை பெற்று அக்குறையை வெல் பவனாகிறான். 2ஆம் இடம் வலுபெற்று ,புதன் நன்னிலையில் வலுவுடன் இருந்தால் தீர்க்க தரிசனம் உள்ளவனாகிறான்.புதன் நீசம் பெற்றிருந்தால் குத்தலான பேச்சு இருக்கும்.இது குறைகள் இருந்தும் புண்ணிய பலன் சிறப்புடன் இருக்கு மானால் தப்பித்துக்கொண்டு வாழ்க்கையை நன்முறையில் ஓட்டிவிடுவான்.செவ்வாய் ,சுக்கிரன் சேர்ந்து பாதகமான முறையில் இருத்தல் ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்கும். செவ்வாயும் ராகுவும் இணைவோ ,பார்வையோ பெற்றிருந்தால் வில்லங்கம் தீர்க்க வேண்டிவரும்.சனி 2 ல் அமருமானால் சொல் பளிச்சென்று வரும் நல்லதானாலும் சரி , கெட்டதானாலும்சரி. அதுவே சுபராக அமரும் பொழுது , 4 ஆம் இடம் வலுப்பெற்று புதன் கெடாமல் இருந்தால் நியாயம் தெரிந்து பேசுபவனாகிறான். சூரியன் வலுவுடன் இருக்க சந்திரனும் கெடாது இருக்குமானால் ஆன்ம சிந்தனையில் நாட்டம் செல்லும்.
கோதைதனபாலன்.
Friday, December 9, 2011
அனுபவ முத்திரைகள்: கிரகமாலிகா யோகம்
அனுபவ முத்திரைகள்: கிரகமாலிகா யோகம்: கிரகமாலிகா யோகம் என்பது ஆயுள் பரிந்தர்யம் ஒரு செல்வாக்கான வாழ்க்கையை அளிப்பதாகும். இந்த யோகம் பெற்றவர்கள் தான் நின்ற இடத்து சிறப்பினும் மேல்...
கிரகமாலிகா யோகம்
கிரகமாலிகா யோகம் என்பது ஆயுள் பரிந்தர்யம் ஒரு செல்வாக்கான வாழ்க்கையை அளிப்பதாகும். இந்த யோகம் பெற்றவர்கள் தான் நின்ற இடத்து சிறப்பினும் மேல்நோக்கி வருவாரன்றி கீழிறங்க மாட்டார்கள். சுபர்கள் நல்ல நிலை பெற்று சரியான திசை நடக்குமாயின் வாழ்வு வளமோடும் செல்வாக்கோடும் இருக்கும். இந்த அமைப்பு இலக்கினம் தொட்டு தொடர்சியாக வரிசை கெடாது எல்லா கிரகங்களும் நின்றிருத்தல் வேண்டும். யோக பலன்களாகவே நடக்கும்.
ஒரு ஜாதகத்தில் லக்னம் தொடக்கம் நாலு கேந்திரங்களில் நிற்கும் கிரகங்கள் வலுவுடன் இருக்க ஜாதகன் தன கால் வலுவுடன் இறுதிவரை நிற்பான்.
இலக்னமும் ராசியும் ஒன்றாக அமையப் பெற்றவர்கள் தனக்கென்று ஓர் வழி அமைத்து அதன் வழிதான் செல்வர்.
கோதைதனபாலன் .
ஒரு ஜாதகத்தில் லக்னம் தொடக்கம் நாலு கேந்திரங்களில் நிற்கும் கிரகங்கள் வலுவுடன் இருக்க ஜாதகன் தன கால் வலுவுடன் இறுதிவரை நிற்பான்.
இலக்னமும் ராசியும் ஒன்றாக அமையப் பெற்றவர்கள் தனக்கென்று ஓர் வழி அமைத்து அதன் வழிதான் செல்வர்.
கோதைதனபாலன் .
Friday, November 25, 2011
புத்திர பாக்கியம்
புத்திரஸ்தானம் என்பது ஒரு ஜாதகத்தில் 5 வது இடத்தை குறிப்பது ஆகும்.இந்த இடம் சுத்தமாக இருத்தல் அவசியம்.யாதொரு பாவ கிரகங்களின் சேர்க்கையோ ,பார்வையோ இருத்தல் கூடாது.புத்திரகாரகனான குரூபார்வையோ,லக்னாதிபதி பார்வையோ பெற்றிருத்தல் அவசியம். சுபகிரகங்கள் இடம்பெறலாம்.வியாழன் தனித்து இடம்பெற்றிருக்கக் கூடாது. அலி கிரகங்கள் புதன்,சனி,யாருடனும் சேராமல்,அல்லது பார்வை பெறாமல் அமர்ந்திருத்தல் ஆகாது.ராகு,கேது இருந்தால் தோஷம் ஏற்படும்.சுபர் பார்வை இருந்தால் மட்டுப்படும்.எது எப்படி இருந்தாலும் .கர்ம ஸ்தானமான10 வது இடமோ ,அதன் அதிபதியோ பலத்துடன்,லக்னாதிபதி ,அல்லது வியாழன் பார்வைபெற்றிருந்தால் கர்மபுத்திர பாக்கியம் பிற்பகுதியில் உண்டு. செவ்வாய் ,சூர்யன், வியாழன் ஆண் மகவை நிர்ணயிக்கும். சந்திரன்,சுக்கிரன் பெண் மகவை நிர்ணயம் செய்யும்.
கோதைதனபாலன்.
கோதைதனபாலன்.
Monday, November 21, 2011
செவ்வாய் தோஷம்
செவ்வாய் தோஷம் என்பது ஒரு திருமண ஜாதகத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. இது பொதுவாக தாமத திருமணத்தை ஏற்படுத்தும். லக்னம்,2 , 4,7,8,10,12 ம இடங்களில் செவ்வாய் நின்றால் ஏற்படுவது.சுபர்கள் பார்வை பெற்றிருப்பின் தோஷம் மட்டுப்படும். இக்கிரகம் தன வலு குறைந்திருத்தல் கூடாது. உச்சம் ,நீசம் , பெற்றிருந்தால் பரிகார தோஷம் எனப்படும். 7,8 க்கு உரியவனாக ஆட்சி பெறுதலும் பரிகாரமாம். இருவர் ஜாதகத்திலும் ஒன்றே போன்ற இடத்தில் இருப்பதாக இருந்தால் நன்மை. பொது சுபராய் வியாழன் பார்க்க நலமே பயக்கும்.
கோதைதனபாலன்.
கோதைதனபாலன்.
Saturday, November 5, 2011
சனி தரும் பலன்
சனி பகவானுக்கு நீதிமான்என்ற பெயர் உண்டு .இவர் யோகராக அமைந்த பட்சத்தில் அவர் திசையில் ,புத்தியில் அவர் அளித்ததை யாராலும் பிடுங்கிவிட முடியாது. பாவராக அமைந்திடின் அவர் தரும் அழிவை பொறுப்பது கஷ்டம் , சுபர் பார்த்திருப்பின் தண்டித்து கரை சேர்ப்பார். குருவுக்கு நிகர் பலமுள்ளவர். பொதுச்சுபராகவோ , யோகராகவோகுரு சனியை பார்த்திருந்தால் தன்மைக்கேற்ப செயலாக்கம் மட்டுப்படும். அஷ்டமா ஸ்தானத்தில் சனி வலுத்திருந்தால் ஆயுள் தீர்க்கம் உண்டு . ஆனால் காரியத்தடைகள் அதிகம் ஏற்படுத்துவார். சனி பார்த்த சந்திரன் திசைகளில் காரிய துரிதம் இருக்கும் . ஏழரை சனி என்ற அதிகார பலம் இவர் ஒருவருக்கே உண்டு. கழிவு சனியில் எந்தவிதத்திலாவது நன்மை செய்துதான் செல்வார் . மூன்று சுற்று ஏழரைசனி காண்பவரும் உண்டு. ஏழரையில் சுப்பர் பலன் , பார்வை பெற்றிருந்தால் கடுமை குறையும். திசா புத்தி நாதனை மீறி செய்யுதல் முடியாது. சனி பிறந்த ஜாதகத்தில் வலு பெற்றிருந்தால் சோதனை கொடுத்தே நல்லது செய்வார். வலு குறைந்திருப்பின் சோதனைகள் கடுமையாகும். சனி குருபார்வை இல்லாது தனி உன்னத வலு பெற்றிருந்தால் சுய சம்பாத்திய தேடல் அளிப்பார். குரு பார்த்திருந்தால் கோடிஸ்வரனாயினும் உத்தியோகம் பார்த்துதான் ஆக வேண்டும். மூதாதையர்களுக்கு இவர் கிழமைகளில் விரதம் இருப்பது நன்று.
கோதைதனபாலன்.
Tuesday, October 25, 2011
Wednesday, October 19, 2011
அனுபவ முத்திரைகள்: பஞ்சாங்கங்கள்
அனுபவ முத்திரைகள்: பஞ்சாங்கங்கள்: ஜோதிடம் கணிக்கும் முறை அந்தந்த ஊரின் ரேகைகளை பொறுத்து மாறுபடும். பலன் சொல்லும் முறைகள் இரண்டு வகைப்படும். 1. திருக்கணித முறை 2.வாக்கிய பஞ்...
பஞ்சாங்கங்கள்
ஜோதிடம் கணிக்கும் முறை அந்தந்த ஊரின் ரேகைகளை பொறுத்து மாறுபடும். பலன் சொல்லும் முறைகள் இரண்டு வகைப்படும்.
1. திருக்கணித முறை
2.வாக்கிய பஞ்சாங்கமுறை
இவைதான் நம்மில் பெரும்பான்மையோர் பின்பற்றுவது. முதல் வகையில் பிறந்த நேரம் தொட்டு ஒவ்வொன்றுக்கும் கணக்கு போட்டுக்கொண்டு சொல்லிவருவது.இதில் எங்கேனும் ஒரு வினாடி தவறி விட்டாலும் பலன் மாறிவிடக் கூடும். இரண்டாம் வகை கணக்குகள் ஓரளவே. ராசியிலும், அம்சத்திலும் உள்ள கிரகங்களின் பலனுடன் திசை பலன் , கோசாரம் பலன் எல்லாமாக அனுபத்தில் சீர் தூக்கி பார்த்து சொல்வது.இந்தவகையை வேறு
சிலர் பாடல் ரூபத்தில் மனனம் செய்து சொல்வதும் உண்டு. எதுவாயினும் அனுபவ ரீதியாக வாக்கிய பஞ்சாங்க முறையே பெருமளவு பொருந்தி வருகிறது.
கோதைதனபாலன்
Sunday, October 9, 2011
அனுபவ முத்திரைகள்: அனுபவ முத்திரைகள்: பெருமாள் சங்கதி
அனுபவ முத்திரைகள்: அனுபவ முத்திரைகள்: பெருமாள் சங்கதி: அனுபவ முத்திரைகள்: பெருமாள் சங்கதி : மதுரையில் சித்திரை திருவிழா வைபவம் யாவரும் அறிந்ததே .இதில் ஒரு விசேஷம் என்ன வென்றால் ராமநாதபுற மாவட்டத்...
Thursday, October 6, 2011
அனுபவ முத்திரைகள்: துருவ நாடி .
அனுபவ முத்திரைகள்: துருவ நாடி .: துருவ நாடி என்ற ஜோதிட நூல் மிகப் பழமையான ஒன்று. சத்துவாச்சாரியாரால் எழுதப்பட்டது. இது நட்சத்திரங்களின் அடிப்படை தகுதிக்கு முக்கியத்துவம் கொ...
துருவ நாடி .
துருவ நாடி என்ற ஜோதிட நூல் மிகப் பழமையான ஒன்று. சத்துவாச்சாரியாரால் எழுதப்பட்டது. இது நட்சத்திரங்களின் அடிப்படை தகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து பலன் சொல்லி வருதல் ஆகும்.இந்நூலில் நட்சத்திர வரிசை கார்த்திகை துவங்கி பரணியில் முடிவதாகும். திசா புத்தி பலன்களே அதிகம் பேசப்பட்டுள்ளது. முதற்கண் இது நட்சத்திரங்களை மூன்று வகையாக பிரிக்கிறது.சுபம், மத்திமம்,அதமம். 27 நட்சத்திரங்களில் ஜென்ம நட்சத்திர தொடக்கம் எண்ணி வர 3,5,7,12,14,16.21,23,25-வது நட்சத்திரங்கள் அசுப நட்சத்திரங்கள்.. 1,9,10,18,19,27-வது நட்சத்திரங்கள் மத்திம நட்சத்திரங்கள். 2,4,6,8,11,13,15,17,20,22,24,26-வது உத்தம நட்சத்திரங்கள்
நமது ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகங்கள் எந்த வரிசைநட்சத்திரங்களில்
ஏறியுள்ளது என்று அறிதல் முக்கியம். அதன் தன்மை பொறுத்தே , தங்கள் வலி அறிந்து திசை, புத்திகளில் செயல் புரிவனவாகும். திரிகோண ராசிகளில் நின்ற கிரகங்கள் சுப வரிசை ஏறியிருப்பின் உத்தம பலன் தருபவை.கேந்திர ராசிகளில் நின்றவை ஏறியிருப்பின் மத்திம பலன் தருபவை. 6,8,12 என்ற மறைவு ஸ்தானத்தில் நின்ற கிரகங்கள் ஏறியிருப்பின் அதம பலன் அளிக்கும்.
இவையே மாறாக அசுப வரிசையில் ஏறியிருப்பின் உத்தம பலன் அளிக்க வல்லது. திரிகோணத்தில் நின்ற கிரகங்கள் அசுப வரிசை பெற்றிருப்பின் அதம பலன் அளிக்கும்.கேந்திர கிரகங்கள் மத்திம பலன். திரிகோண கிரகங்கள் மத்திம வரிசை பெற்றிருப்பினும் சுப பலன் அளிக்கும்.கேந்திர கிரகங்கள் மத்திம பலன்.மறைவிடம் பெற்ற கிரகங்கள் அதம பலன் அளிக்கும். 2,3,11-வது இடம் அமர்ந்த கிரகங்கள் ,தனித்து அல்லது கிரகங்களின் சேர்க்கை பொறுத்து பலன்கள் அளிக்கும். இவை யாவும் திசை,புத்திகளிலேயே விளைவை தருவன வாகும்.
ஆக,ஒரு கிரகத்தின் நன்மை,தீமை பயக்கும் தன்மைகளை 4 விஷயங்களை கருத்திற் கொண்டு கணிக்க வேண்டும்.
1.கிரகத்தின் தனி சுபாவம்.
2.ஆதிபத்தியம் பெற்றதின் தன்மை
3.ஜென்மநட்சத்திர வரிசையில் நின்று பெற்ற வலிமை.
4.திரிகோண , கேந்திர, மறைவிடத்தில் பெற்ற வலிமை.
2,3,11-வது ராசி கிரகங்கள் இந்த நட்சத்திர அடிப்படை வரிசையில் பார்ப்பது திசை, புத்திகளுக்கே பலிதமாகும்.
கோதைதனபாலன்.
Wednesday, September 28, 2011
சகடயோகம்
ராசி கட்டத்தில் வியாழனும் சந்திரனும் ஒருவர்கொருவர் ஆறாமிடம் அல்லது எட்டாமிடத்தில் இருந்தால் ஏற்படுவது சகட யோகம். இதன் பலன் யோகங்கள் சிறிது காலம் ஏறுவதும் சிறிது காலம் இறங்குவதுமாய் சம்பவிக்கப்படும். இருவரும் லக்னத்திற்கு சுபர்களாய் இருந்திட்டால் கூடுதல் யோகம் சற்று தங்கும். தேய்பிறை சந்திரன் பெரிய அளவில் தராது.வியாழன் லக்ன பாவியானால் யோகம் மட்டுப்படும்.எனினும்பொதுச் சுபர் என்ற வகையில் சிறிதளவு நன்மை புரியலாம். இவைகள் தாங்கள் ஜென்மகாலத்தில் ஏறி நின்ற நட்சத்திரம் சுப,அசுப,மத்திம தன்மை கணித்தே செயலில் இறங்குவர்.
தாங்கள் நின்றிருந்த பாவத்தின் அடிப்படையில் பலன் புரிவர்.
பூரண சந்திரன் .........முழுச்சுபர். பெண் கிரகம். லக்ன சுபர்,பாவர்
என்பது
தேய்பிறை சந்திரன் ......... .பாவர் ஆண் கிரகம். வேறு வேறு.
கோதைதனபாலன்
அனுபவ முத்திரைகள்: நீச பங்க ராஜ யோகம்
அனுபவ முத்திரைகள்: நீச பங்க ராஜ யோகம்: கிரகங்கள் நீசம் என்பது அவை தங்கள் பலம் இழந்து செய்யலாற்றும் நிலைமை. அவ்வாறு இருக்கையில் பொது சுப கிரகங்களான வியாழன்,சந்திரன் பார்வை பெற்ற...
நீச பங்க ராஜ யோகம்
கிரகங்கள் நீசம் என்பது அவை தங்கள்
பலம் இழந்து செய்யலாற்றும் நிலைமை.
அவ்வாறு இருக்கையில் பொது சுப
கிரகங்களான வியாழன்,சந்திரன் பார்வை
பெற்றிருந்தாலோ,அவர்களின் கேந்திரங்களில்
நின்றிருந்தாலும் பலம் பெற்றதாய் கருதப்படும்.
ராசியில் நீசம் பெற்று அம்சத்தில் உச்சம்
பெற்றிருந்தாலும் பலம் உண்டு.ஆனால்
ராசியில் உச்சம் பெற்று அம்சத்தில் நீசமானால்
பலமில்லை.பரிவர்த்தனை யோகத்தில்
பலம் உண்டு. இது தரும் பலனாவது,
எந்தவகையிலும் ஆரம்பத்தில் சிரமம்
தாமதம் ஏற்படுத்தினாலும் நன்மையான
யோகம் தருவதாய் மாறி நிற்கும்.
கோதைதனபாலன்
நீச கிரகங்கள்
தங்கள் திசை புத்தி காலங்களில்
நற்பலன்தரும். மற்றையவர்
திசை நடக்கும்காலத்தில்
நன்மை செய்யாது.
Tuesday, September 27, 2011
அனுபவ முத்திரைகள்: முகவுரை
அனுபவ முத்திரைகள்: முகவுரை: அனுபவ முத்திரை வரிசையில் இந்த தொகுப்பை ஜோதிடம் சார்ந்த துறைக்கு அர்பணிக்கிறேன். நான் தொழில் முறை ஜோதிடம் கையாளவில்லை.விஞ்ஞான பூர்வமாய் அறிந்...
முகவுரை
அனுபவ முத்திரை வரிசையில் இந்த தொகுப்பை ஜோதிடம் சார்ந்த துறைக்கு அர்பணிக்கிறேன். நான் தொழில் முறை ஜோதிடம் கையாளவில்லை.விஞ்ஞான பூர்வமாய் அறிந்திட்டு ஆத்மார்த்தமாய் உணர்ந்து கொண்ட விஷயங்களை ,பாடமாக அல்லாது அவ்வப்பொழுது மனதில் இருத்தி வைத்துக்கொள்ளக் கூடியதாய் பல கைப்பிரதிகளாவது போன்று தகவல்களை தர விழைகிறேன்.
நொந்த மனதில் எழும் எண்ணத் தெளிவுகள் உழுத நிலமாகத்தான் இருக்கும் .அதில் விழும் ஆர்வம் எத்தகையதாயினும் பரிமளித்து வரக் கூடிய ஒன்றாகும்.இருபது வருடம் முன்னர் நான் உடல் நலம் மிகவும் குன்றி சுமார் ஆறு வருடங்கள் வீட்டாளாக இருந்த பொழுது கற்று தேர்ந்தது இந்த ஜோதிடம்
கஜகேசரி யோகம்.
சரி ,இன்று ஜோதிட உலகில் விருப்பமாயும் ,பலமான ஒன்றாகவும் பேசப்படுவது கஜகேசரி யோக அமைப்பு . இதன் பலன் : இந்த யோகத்தை உண்டுபண்ணும் கிரகங்கள் பலம் பொருந்தியனவாய் இருத்தல் அவசியம்.வியாழனும் ,சந்திரனுமே இந்த யோகத்தின் காரண கர்த்தாக்கள். ஒன்றுக்கொன்று கேந்திர அமைப்பில் இருக்கும் போது ஏற்படுவது. எந்த பாவங்களிலிருந்து,எப்படிப்பட்டவர்களாக .எந்தவித பலத்துடன் உள்ளனரோ அது ஒத்து திசாபுத்திக்கு ஏற்பசெயல்படுவார்கள் . யோகம் தருவது வாழ் நாள் முழுவதும் அசாத்திய மன உறுதி மட்டுமே. இதன் தாக்கம் எதற்காகவோ என்றும் போராடி சாதிப்பது ஆகும்.
கேந்திரம் அமைப்பு: லக்னத்திலிருந்து எண்ணிவர நான்காமிடம்,ஏழாமிடம்.பத்தாமிடம் ஆகும் . யோக அமைப்பில் வியாழனும் சந்திரனும் ஒருவர்க்கொருவர் எண்ணிவரும் இடங்களாகும்.
கோதைதனபாலன்
கலைஞர் கருணாநிதிக்கு இந்த யோகம் அசாத்தியமாக உள்ளது என்று ஜோதிட வல்லுநர் சொல்வர்.
Subscribe to:
Posts (Atom)


