Wednesday, October 19, 2011

அனுபவ முத்திரைகள்: பஞ்சாங்கங்கள்

அனுபவ முத்திரைகள்: பஞ்சாங்கங்கள்: ஜோதிடம் கணிக்கும் முறை அந்தந்த ஊரின் ரேகைகளை பொறுத்து மாறுபடும். பலன் சொல்லும் முறைகள் இரண்டு வகைப்படும். 1. திருக்கணித முறை 2.வாக்கிய பஞ்...

பஞ்சாங்கங்கள்

ஜோதிடம் கணிக்கும் முறை அந்தந்த ஊரின் ரேகைகளை பொறுத்து மாறுபடும். பலன் சொல்லும் முறைகள் இரண்டு வகைப்படும்.

1. திருக்கணித முறை 
2.வாக்கிய பஞ்சாங்கமுறை 


இவைதான்  நம்மில் பெரும்பான்மையோர் பின்பற்றுவது. முதல் வகையில் பிறந்த நேரம் தொட்டு ஒவ்வொன்றுக்கும் கணக்கு போட்டுக்கொண்டு சொல்லிவருவது.இதில் எங்கேனும் ஒரு வினாடி தவறி விட்டாலும் பலன் மாறிவிடக் கூடும்.  இரண்டாம் வகை கணக்குகள் ஓரளவே.  ராசியிலும்,  அம்சத்திலும் உள்ள கிரகங்களின் பலனுடன் திசை பலன் , கோசாரம் பலன் எல்லாமாக அனுபத்தில் சீர் தூக்கி பார்த்து சொல்வது.இந்தவகையை வேறு 
 சிலர் பாடல் ரூபத்தில் மனனம் செய்து சொல்வதும் உண்டு.   எதுவாயினும் அனுபவ ரீதியாக வாக்கிய பஞ்சாங்க முறையே பெருமளவு பொருந்தி வருகிறது. 


கோதைதனபாலன் 

Sunday, October 9, 2011

அனுபவ முத்திரைகள்: அனுபவ முத்திரைகள்: பெருமாள் சங்கதி

அனுபவ முத்திரைகள்: அனுபவ முத்திரைகள்: பெருமாள் சங்கதி: அனுபவ முத்திரைகள்: பெருமாள் சங்கதி : மதுரையில் சித்திரை திருவிழா வைபவம் யாவரும் அறிந்ததே .இதில் ஒரு விசேஷம் என்ன வென்றால் ராமநாதபுற மாவட்டத்...

Thursday, October 6, 2011

அனுபவ முத்திரைகள்: துருவ நாடி .

அனுபவ முத்திரைகள்: துருவ நாடி .: துருவ நாடி என்ற ஜோதிட நூல் மிகப் பழமையான ஒன்று. சத்துவாச்சாரியாரால் எழுதப்பட்டது. இது நட்சத்திரங்களின் அடிப்படை தகுதிக்கு முக்கியத்துவம் கொ...

துருவ நாடி .

 துருவ நாடி என்ற ஜோதிட நூல் மிகப் பழமையான ஒன்று. சத்துவாச்சாரியாரால் எழுதப்பட்டது. இது நட்சத்திரங்களின் அடிப்படை தகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து பலன் சொல்லி வருதல் ஆகும்.இந்நூலில் நட்சத்திர வரிசை கார்த்திகை துவங்கி பரணியில் முடிவதாகும். திசா புத்தி பலன்களே அதிகம் பேசப்பட்டுள்ளது.   முதற்கண் இது நட்சத்திரங்களை மூன்று வகையாக பிரிக்கிறது.சுபம், மத்திமம்,அதமம்.  27 நட்சத்திரங்களில் ஜென்ம நட்சத்திர தொடக்கம் எண்ணி வர 3,5,7,12,14,16.21,23,25-வது நட்சத்திரங்கள் அசுப நட்சத்திரங்கள்.. 1,9,10,18,19,27-வது நட்சத்திரங்கள் மத்திம நட்சத்திரங்கள்.  2,4,6,8,11,13,15,17,20,22,24,26-வது உத்தம நட்சத்திரங்கள் 

நமது ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகங்கள் எந்த வரிசைநட்சத்திரங்களில் 
ஏறியுள்ளது என்று அறிதல் முக்கியம். அதன் தன்மை பொறுத்தே , தங்கள் வலி அறிந்து திசை, புத்திகளில் செயல் புரிவனவாகும். திரிகோண ராசிகளில் நின்ற கிரகங்கள் சுப வரிசை ஏறியிருப்பின் உத்தம பலன் தருபவை.கேந்திர ராசிகளில் நின்றவை ஏறியிருப்பின் மத்திம பலன் தருபவை.  6,8,12 என்ற மறைவு ஸ்தானத்தில் நின்ற கிரகங்கள் ஏறியிருப்பின் அதம பலன் அளிக்கும்.
இவையே மாறாக அசுப வரிசையில் ஏறியிருப்பின் உத்தம பலன் அளிக்க வல்லது. திரிகோணத்தில் நின்ற கிரகங்கள் அசுப வரிசை பெற்றிருப்பின் அதம பலன் அளிக்கும்.கேந்திர கிரகங்கள் மத்திம பலன்.  திரிகோண கிரகங்கள் மத்திம வரிசை பெற்றிருப்பினும் சுப பலன் அளிக்கும்.கேந்திர கிரகங்கள் மத்திம பலன்.மறைவிடம் பெற்ற கிரகங்கள் அதம பலன் அளிக்கும். 2,3,11-வது இடம் அமர்ந்த கிரகங்கள் ,தனித்து அல்லது கிரகங்களின் சேர்க்கை பொறுத்து பலன்கள் அளிக்கும். இவை யாவும் திசை,புத்திகளிலேயே விளைவை தருவன வாகும். 

ஆக,ஒரு கிரகத்தின் நன்மை,தீமை பயக்கும் தன்மைகளை 4  விஷயங்களை கருத்திற் கொண்டு கணிக்க வேண்டும்.

1.கிரகத்தின் தனி சுபாவம்.
2.ஆதிபத்தியம்  பெற்றதின்  தன்மை     
3.ஜென்மநட்சத்திர வரிசையில் நின்று பெற்ற வலிமை. 
4.திரிகோண ,  கேந்திர, மறைவிடத்தில் பெற்ற வலிமை. 

2,3,11-வது ராசி கிரகங்கள் இந்த நட்சத்திர அடிப்படை வரிசையில் பார்ப்பது திசை, புத்திகளுக்கே பலிதமாகும்.       





கோதைதனபாலன்.