அனுபவ முத்திரைகள் ஜோதிடம்
திரு.மாதேஸ்வரன் அவர்கள் புத்தகம் ஜோதிடக் கலை எனது பால பாடமாகும். துருவ நாடி, புலிப்பாணி ஜோதிடம், சுந்தர சேகரம், பி .வி ராமன் புத்தகங்கள் மற்றும் சில ஜோதிட அறிவை சற்று வியாபிக்கச் செய்தன.மேலாக படித்தவற்றை எல்லாம் எனது குடும்பத்தார்,நெருங்கினோர் ஜாதகங்களுடன் ஒப்பிட்டு உண்மை அறிந்து சொல்ல முற்பட்டது, இன்றும் சரியாகப் புரிந்து கொள்ள உதவியாய் உள்ளது. திரு.மாதேஸ்வரன் தன்முகவுரையில் தான் நாத்திகனாய் இருந்து பின் மாறி இந்நூல் எழுதியதாகச் சொன்னது என் நம்பிக்கைக்கு வித்தானது.
Wednesday, October 9, 2013
'Idhayam oru koyil ' song from 'Idhaya Koyil' mpeg1video
இதயத்தில் அழகாக என்றென்றும் குடியேறிய ஒரு...அழகான.. நெஞ்சைத் தாலாட்டும் ஒரு சுகமான ஆத்மா ராக பாவங்கள்...!!
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே...! எனது ஜீவன் நீதான் என்றும் புதிது. ஆத்ம ராகத்தில் ஆடும் இருஉயிர்கள்.. உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே... அவன் ஜீவன் இவள்தான்.. அவனுக்கு என்றும் புதிது.. காதலிக்கு இவன் இசையை மலராய் நாளும் சூட்டுவான்.. என்ன ஒரு உணர்வு...!!
கோதை தனபாலன்
Tuesday, August 20, 2013
யோகநிலை ஒருவருக்கொருவர் வேறுபாடும் நிலை.
சிலருக்கு யோக ஸ்தானம் ஒன்றுபோல் அமைந்திருந்தாலும் பலன்களின் தன்மைகள் மாறுபடும். காரணம் நற்பலன் கொடுக்கும் காரியக் கிரகம் ,அல்லது கெடுதல் செய்யும் காரியக் கிரகம் எத்தன்மையது, எந்த இடத்திற்கு பாடியப்பட்டது மட்டுமே கவனம் கொள்ளாமல் அவை ஏறியிருக்கும் நட்சத்திரம் எப்படிப்பட்டது என்று அறிந்தே பலன் காண வேண்டும். பொது சுபர், லக்ன சுபர் என்று பிரிக்கப் படும்போதே லக்ன சுபரே ஜாதகருக்கு நன்மை அதிகம் தரக் கூடிய ஆதிபத்யத்திற்கு உள்ளாகிறான். இவை செயல்படும் தன்மைகளை அவை ஏறி நிற்கக் கூடிய நட்சத்திர சாரங்களே தீர்மானிக்கின்றன. சுபர் 6 , 8, 12 பாவஸ்தான அதிபதியின் காரக நட்சதிரத்தில் இருந்தால் பலன்கள் இல்லை. மற்றையதில் இருந்தால் பலன்கள் அந்தந்த வலு, தன்மைகளுக்கு ஏற்றாற்போல் வெளிப்படும். பாவர்கள் சுப ஸ்தானத்து அதிபதி காரகம் பெற்ற நட்சத்திரத்தில் ஏறி நின்றால் கடுமை குறைந்து காணப்படும்.
கோதைதனபாலன்.
Wednesday, July 18, 2012
அனுபவ முத்திரைகள்: வேலைக்கேற்ற கல்வி
அனுபவ முத்திரைகள்: வேலைக்கேற்ற கல்வி: இன்று உயர் கல்வி முடித்து ,மேம்பட்ட துறை துறை எடுத்து தன் மக்களை படிக்க வைக்க பெற்றவர்கள் அலையும் நேரமிது. இதில் அவர்கள் சில சங்கதிகளை ...

வேலைக்கேற்ற கல்வி
இன்று உயர் கல்வி முடித்து ,மேம்பட்ட துறை துறை எடுத்து தன் மக்களை படிக்க வைக்க பெற்றவர்கள் அலையும் நேரமிது. இதில் அவர்கள் சில சங்கதிகளை கவனத்தில் கொண்டு முயற்சி எடுத்தல் நலம். பெரும் பாலானோர் நல்ல படிப்பு, அதற்குத் தகுந்த வேலை என்று இரண்டையுமே ஒரே தட்டில் வைத்து பார்த்து முடிவெடுக்கின்றனர். இப்படிச் செய்வதால் பாதிக்கு மேல் முன் பின் முரணாக ஆகக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஒருவர் ஜாதகப்படி அவருக்கு எந்த மாதிரி கல்வி அமையும் ; தொழில் எப்படி அமையும் என்றெல்லாம் ஓரளவு சரியாகக் கணிக்கலாம்.
படிப்புக்கு உரிய ஸ்தானம் இரண்டாமிடம். அதன் மீதுள்ள நுட்ப அறிவு பேசுமிடம் நான்காமிடம். தொழில் அமைவது பற்றிப் பேசுவது பத்தாமிடம்.
புதன் நல்ல முறையில் அமைந்திருந்தால் ,தன அறிவுத்தி றத்தாலே அவன் மேன்மையடைய வாய்ப்பு உண்டு. பாடக் கல்வி வேண்டுமானால் அவனுக்கு இரண்டு, நாலாமிடம் கெடாது வலுவோடு இருக்க வேண்டும். சிலருக்கு புதன் சரியாக அமையாத நிலையில் இந்த இடங்கள் கை கொடுக்கும். மூன்றாமிடம் இவற்றுடன் சேர்ந்து,சந்திரனும் நன்றாக அமைந்து வலுவுடன் இருந்தால் கலை,கேள்விகளில் வல்லவனாய் இருப்பான். சுக்கிரன் நன்கமைந்தால்,இசை,நடிப்பு கைகூடும்.
சூரியன், புதன் சேர்ந்திருக்க கணிதத் துறையும்,உடன் வியாழன் ,கேது நன்கமைந்தால் சட்டக் கல்வியும் ஏற்படலாம்.
சூரியன்,சுக்கிரன் இணைவு மென்பொருள் துறை கல்வி சேர்க்கும். செவ்வாய்,சனி சேர்க்கை இயந்திர சம்பந்தம் ஏற்படுதலை அறிவிப்பதாவது. தொழில் நுணுக்கக் கல்வி என்றும் சொல்லலாம்.உடன் சந்திரன் பரிபூரணமாய் வரின் விவசாயம் செழிக்கும்; சுக்கிரன் சேர்ந்தால் கட்டிடக் கலை சம்பந்தம் உருவாகும்.
புதன்,வியாழன்,கேது உரிய இடத்தில இருந்தால் மருத்துவத்துறை கல்வி அமையும். ஆறாமிடம் சிறப்பு.
சரி, பின்னால் அவன் உத்தியோகம் பார்ப்பானா,சுய தொழில் செய்வானா என்ற சந்தேகம் யாருக்கும் எழும். ஒரு ஜாதகத்தில் சந்திரனை வியாழன் பார்த்திருந்தால் உத்தியோகம் நிச்சயம். சனி வலுப் பெற்றிருந்தால் உத்தியோகம் செய்ய விடாது. சொந்த தொழிலே அமையும்.பத்தாம் இடத்தை குரு பார்த்திருந்தாலும் வேலை உண்டு.
இரண்டு,நான்குடன் பத்தாமிடம் சம்பந்தம் பெற்றாலே படிப்புக் குண்டான வேலை.
கோதைதனபாலன்

Friday, June 15, 2012
அனுபவ முத்திரைகள்: திருமண காலங்கள்..!
அனுபவ முத்திரைகள்: திருமண காலங்கள்..!: திருமண காலங்கள்..! சிலருக்கு சரியான பருவத்தில் திருமணம் நிறைவேறும் . சிலருக்கு தள்ளிப் போகும்.எதுவும் நல்லதற்கே என்று நாம் ...
திருமண காலங்கள்..!
திருமண காலங்கள்..!
சிலருக்கு சரியான பருவத்தில் திருமணம் நிறைவேறும் .
சிலருக்கு தள்ளிப் போகும்.எதுவும் நல்லதற்கே என்று
நாம் கருத்தில் எடுத்துக் கொண்டாலும் சில விஷயங்களை
கவனத்தில் கொள்ளுதல் முறையன்றோ.? பொதுவாக
பாவதோஷம்,செவ்வாய் தோஷம் உடைய வர்களுக்கு தாமத
திருமணம் நலமே. கிரஹா அமைப்பில் எந்த தோஷமும் இல்லைஎன்றாலும்
தசா புத்தி காரணமாய் தாமதப் படுதலும் உண்டு, திருமணம் நடக்க கோச்சார ரீதியில்
குருவான சுபர் ஏழு, எட்டு,பதினொன்றமிடம் பனிரண்டாம் இடம்
இவற்றில் ஒன்றை பார்த்திருத்தல் வேண்டும்.எல்லாவற்றிற்கும் மேலாக சுக்கிரன்
பலமே இல்லாது ,ஏழு, எட்டும் வலுவின்றி இருந்தால்
திருமண யோகம் இல்லை. சிலருக்கு ஸ்தான பலம் இருந்தும்
சுக்கிரன் கெட்டோ அல்லது பாவருடன் இணைந்தோ இருக்க
தசா புத்தி துணை செய்யாவிடில் குழந்தை பாக்கியம் இருந்தும்
துணைவருடன் கூடி வாழும் யோகம் இருக்காது. பொதுவான தடைகள்
உள்ள சாதகர்கள் திருமணஞ்சேரி சென்றுவர திருமணங்கள் கைகூடுவது
உண்மையான நிலையாக உள்ளது.
Subscribe to:
Posts (Atom)