அனுபவ முத்திரை வரிசையில் இந்த தொகுப்பை ஜோதிடம் சார்ந்த துறைக்கு அர்பணிக்கிறேன். நான் தொழில் முறை ஜோதிடம் கையாளவில்லை.விஞ்ஞான பூர்வமாய் அறிந்திட்டு ஆத்மார்த்தமாய் உணர்ந்து கொண்ட விஷயங்களை ,பாடமாக அல்லாது அவ்வப்பொழுது மனதில் இருத்தி வைத்துக்கொள்ளக் கூடியதாய் பல கைப்பிரதிகளாவது போன்று தகவல்களை தர விழைகிறேன்.
நொந்த மனதில் எழும் எண்ணத் தெளிவுகள் உழுத நிலமாகத்தான் இருக்கும் .அதில் விழும் ஆர்வம் எத்தகையதாயினும் பரிமளித்து வரக் கூடிய ஒன்றாகும்.இருபது வருடம் முன்னர் நான் உடல் நலம் மிகவும் குன்றி சுமார் ஆறு வருடங்கள் வீட்டாளாக இருந்த பொழுது கற்று தேர்ந்தது இந்த ஜோதிடம்
கஜகேசரி யோகம்.
சரி ,இன்று ஜோதிட உலகில் விருப்பமாயும் ,பலமான ஒன்றாகவும் பேசப்படுவது கஜகேசரி யோக அமைப்பு . இதன் பலன் : இந்த யோகத்தை உண்டுபண்ணும் கிரகங்கள் பலம் பொருந்தியனவாய் இருத்தல் அவசியம்.வியாழனும் ,சந்திரனுமே இந்த யோகத்தின் காரண கர்த்தாக்கள். ஒன்றுக்கொன்று கேந்திர அமைப்பில் இருக்கும் போது ஏற்படுவது. எந்த பாவங்களிலிருந்து,எப்படிப்பட்டவர்களாக .எந்தவித பலத்துடன் உள்ளனரோ அது ஒத்து திசாபுத்திக்கு ஏற்பசெயல்படுவார்கள் . யோகம் தருவது வாழ் நாள் முழுவதும் அசாத்திய மன உறுதி மட்டுமே. இதன் தாக்கம் எதற்காகவோ என்றும் போராடி சாதிப்பது ஆகும்.
கேந்திரம் அமைப்பு: லக்னத்திலிருந்து எண்ணிவர நான்காமிடம்,ஏழாமிடம்.பத்தாமிடம் ஆகும் . யோக அமைப்பில் வியாழனும் சந்திரனும் ஒருவர்க்கொருவர் எண்ணிவரும் இடங்களாகும்.
கோதைதனபாலன்
கலைஞர் கருணாநிதிக்கு இந்த யோகம் அசாத்தியமாக உள்ளது என்று ஜோதிட வல்லுநர் சொல்வர்.
No comments:
Post a Comment